அரோகரா கோஷத்துடன் நல்லூர் கந்தனின் இரதோற்சவம்

0 20

இலட்சக்கணக்கான அடியவர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தப் பெருமானின் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நான்கு திசைகளிலும் குழுமியிருந்த இலட்சக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லூர்க் கந்தன் தேரில் ஆரோகணித்தார்.

பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆடியமாவசைக்கு பின்னர்வரும் ஆறாம் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து மஹோற்சவங்கள் காலை, மாலை வேளைகளில் சிறப்புற இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சப்பரத்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை விசேட வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து, நல்லூர்க் கந்தன் காலை 7.15 மணியளவில் தேரில் ஆரோகணித்தார்.

பின்னர் விசேட பூஜைகள் இடம்பெற்று, இலட்சக் கணக்கான மக்களின் அரோகரா கோஷத்துடன், தேரில் எழுந்தருளிய கந்தன், தேரில் திருவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது, பெருமளவான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் மற்றும் அடியளித்தல்போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

நல்லூர்க் கந்தனின் மஹோற்சவ காலங்களில் திருமுறைகளை பாராயணம் செய்யும் மெய்யடியார்கள் இன்றும் திருமுறை பாரயணம் மற்றும் பஜனைகளிலும் ஈடுபட்டனர்.

காலை 09.30 மணியளவில் மீண்டும் தேர் இருப்பிடத்தை அடைந்தபோது, சுவாமிக்கு விசேட தேரடி பூஜைகள் இடம்பெற்று, பச்சை சாத்தப்பட்டது.

தொடர்ந்து வசந்த மண்டபத்தில் கந்தன் எழுந்தருளினார்.

மஹோற்சத்தின் தீர்த்தோற்சவம், ஆவணி அமாவாசை தினமான நாளையதினம் இடம்பெறவுள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ