தற்கொலைதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன

0 11

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மதியம் தோண்டியெடுக்கப்பட்டன.

ஏப்ரல் 21இல், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்மீது காத்தான்குடியை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான முகமட் ஆஸாத் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 75க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

குண்டுத்தாக்குதலை நடாத்திய சூத்திரதாரியின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. விசாரணைகளையடுத்து, குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

குறித்த உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி புதைக்கப்பட்டதை தொடர்ந்து, 27ஆம் தேதி அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் அரசசட்டத்தரணி யாதவன் ஊடாக மனுத் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த சடல உறுப்புக்களை அங்கிருந்து அகற்றுவதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. சி. றிஸ்வான் உத்தரவிட்டிருந்தார்.

இன்று மாலை நீதிபதி ஏ. சி. றிஸ்வான் முன்னிலையில் குறித்த உடற்பாகங்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டியெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. வாசுதேவன், பிரதேச கிராம சேவையாளர் உள்பட, பொலிஸ் உயர் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.

குறித்த உடற்பாகங்களை புதைப்பற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவுசெய்யும் வரையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவற்றை வைப்பதற்கு பணிக்கப்பட்டது.

மயானத்திற்கு வெளிப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ. கருணாகரம், மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ