2020இல் சுதந்திர கட்சி ஆட்சி அமைக்கும் – மைத்திரி

0 15

2020 இல், சிறிலங்கா சுதந்திர கட்சி ஆட்சி அமைக்கும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் 68ஆவது மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு மாநாடு, கொழும்பு சுககதாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

எஸ். டபிள்யூ. ஆர். டி.பண்டாரநாயக்கவினால் 1951ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது சம்மேளனத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி மாநாடு, கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

சர்வமத வழிபாடுகளுடன்ந ஆரம்பமான மாநாட்டில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, குமார் வெல்கம உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அத்துடன், இந்தியா, பங்களதேஷ், ரஷ்யா, நேபாளம் உள்ளிட்ட பன்னாட்டு இராஜதந்திரிகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜாதிக ஹெல உறுமய, பொது மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக முன்னிலை கட்சி, பிவிதுரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, சிறிலங்கா பொதுஜன கட்சி, தேசிய விடுதலை கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தொழிலாளர் கட்சி, நவ ஹெல உறுமய, முற்போக்கு மக்கள் கட்சி, ஜாதிக பெரமுன, அருணலு மக்கள் கூட்டணி, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, எக்சத் சிறிலங்கா பெரமுன உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி சிறிசேன தொடர்ந்து பேசுகையில், “எமது கட்சி செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் வாரங்களில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட சம்மேளன கூட்டங்களை நடாத்த இருக்கின்றோம். கட்சியை பலப்படுத்துவோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக முன்னணியினை நாம் உருவாக்குவோம்.

“ஜனாதிபதி வேட்பாளர் யார்? யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றீர்கள்? என்ன செய்யப் போகின்றீர்கள்? என எம்மில் பலர் என்னிடம் கேட்கின்றார்கள். அவர்களுக்கு ஒன்றேயொன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

“எமது கொள்கைக்கு உள்பட்டு, எமது நோக்கத்திற்கு உள்பட்டு, 2020 தேர்தலில் ஆட்சி அமைப்பது நாம் என்பதை உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றேன். அதற்கு அனைவரும் தயாராகுங்கள். எனக்கும் வயது 68; சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் வயது 68. நாம் அசுர பலத்துடன் எதிர்வரும் சில மாதங்களில் கட்சியைப் பலப்படுத்திக்கொண்டு, 2020ஆம் ஆண்டில் நீங்கள் விரும்பியது போன்று எமது அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வோம் என உறுதி பூணுவோம். வெற்றி எமக்கே.’’ என குறிப்பிட்டா

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ