சந்திரயான்-2 ‘லான்டர்’ பகுதி சந்திர பரப்பில் கண்டுப்பிடிப்பு

0 29

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ‘சந்திரயான்-2’ ‘லான்டர்’ பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக ‘இஸ்ரோ’ அறிவித்துள்ளது.

சந்திரயான்- 2 லான்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லான்டர் பகுதியை, நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 விண் ஓபிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லான்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 20ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லான்டர் தனியாக பிரிந்து, நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. பின்னர், இரண்டுமுறை உந்து விசையைப் பயன்படுத்தி விக்ரம் லான்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லான்டர் நிலவை நெருங்கியது.

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லான்டர் நிலவை நெருங்கிய சந்தர்ப்பத்தில் அதிலிருந்து சமிக்ஞை எதுவும் கிடைக்காத நிலையில், நிலவிலிருந்து சரியாக 2.1 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தபோது லான்டர் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடனான தொடர்பிலிருந்து விலகியது.
லான்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்த நிலையில், லான்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ