பயங்கரவாதம் சமயத்துக்கோ, இனத்துக்கோ வரையறுக்கப்பட்டதல்ல – சவுதி சபாநாயகர்

0 2

‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இலங்கையைப்போன்றே சவுதி அரேபியாவினதும் குறிக்கோளாகும். பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்துக்கோ இனத்துக்கோ வரையறுக்கப்பட்டது அல்ல’ என்று, சவுதி அரேபிய பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்திருக்கிறார்

இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பை பல துறைகளிலும் விரிவுபடுத்தல் தொடர்பாக சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. சவுதி அரேபிய நிதியத்தினூடாக இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயல்பாடுகளுக்காக சவுதி அரேபியா நீண்ட காலமாக வழங்கிவரும் உதவிகளுக்கு சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும், ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக ஜனாதிபதி பாராட்டு தெரிவித்ததுடன், எதிர்வரும் காலங்களில் அதிகளவிலானோர் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ