அமெரிக்கா: சீன பொருள்களுக்கான வரி ஒத்திவைப்பு

0 22

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

250 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த வரியை, நல்லெண்ண அடிப்படையில் தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருந்த இந்த 5 சத வீத கூடுதல் வரியை, இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். சீன அரசாங்கம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீனாவும் அமெரிக்க பொருள்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை இரத்து செய்கிறது.

இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போர் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இதனை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் ஒரு புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க, இரண்டு அரசுகளும் முடிவுசெய்துள்ள வேளையில், வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயிரத்து 300 பொருட்களின்மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதற்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்தது.

சோயாபீன்ஸ், வாகனங்கள் மற்றும் தோடம்பழச்சாறு உள்பட, 106 அமெரிக்க பொருள்களின்மீது, 25 சத வீதம் அதிக வரி விதிக்கப்போவதாக, 2018ஆம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. ஆயிரத்து 300 சீனப் பொருள்களுக்கு 25 சத வீத அதிக வரிவிதிக்கும் விவரங்களை அமெரிக்கா அறிவித்த சில மணி நேரத்தில், பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவின் நியாயமற்ற அறிவுசார் சொத்துரிமைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான், தங்களின் அதிக வரிவிதிப்பு முன்மொழிவு என, வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் எதிரொலித்தது. அதனைத்தொடர்ந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.
ஆனால், முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

ஒக்ரோபர் முதலாம் தேதி நவ சீனா உருவாக்கப்பட்ட நாள். அதனால், இறக்குமதி பொருள்களுக்கான வரி அமலாக்கப்படுவதை ஒத்திவைக்கவேண்டுமென, சீனாவின் துணை பிரதமர் லியூ ஹ கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த வரி விதிப்பை ஒத்திவைத்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ