தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளருக்கே ஆதரவு – சம்பந்தன்

0 12

யார் வேட்பாளர் என்பதில் எமக்கு பிரச்னை கிடையாது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்னைக்கு எந்தமாதிரியான தீர்வினை வழங்கப் போகின்றனர் என்பதே எமக்குள்ள பிரச்னை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று. எமது நிபந்தனைகளுக்கு இணங்கி, எம்முடன் பேசும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது ஆதரவினை வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை பெறுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்தின ஆகியோர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவைக் கோரினர். இதன்போதே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பது அல்ல எமது பிரச்னை. தமிழ் மக்களின் இனப் பிரச்னைக்கு எந்த வடிவமான தீர்வினை வழங்கப் போகின்றார் என்பதுதான் எமது பிரச்னை. ஆகவே, தமிழ் மக்களின் கோரிக்கைளை ஏற்றுக்கொண்டு, உண்மையான உறுதியினை வழங்கும் வேட்பாளருக்கு எமது ஆதரவினை தெரிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை மறுதினம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர். அதன்பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது தீர்மானங்கள் தொடர்பில் பேசவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ