இனப் பிரச்னைக்கு ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு? – ரணில்

0 13

இனப்பிரச்னைக்கு, ஒரு வருடத்தில் அரசியல் தீர்வும், கல்முனை பிரச்னைக்கு விரைவில் தீர்வும் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள்வரை இடம்பெற்ற இச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டனர்.
இதன்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கி, ஒரு வருடத்தில இனப் பிரச்னைக்கான தீர்வு வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,
‘தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் காலங்கடத்தப்படுகின்றன.கடந்த ஐந்து வருடத்திலும் அது தீர்க்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலும் வந்து விட்டது. இதில் உங்கள் கட்சியிலேயே இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை. உங்கள் கட்சியிலிருந்தே மூன்று வேட்பாளர்கள் எங்களுடன் உரையாடியுள்ளனர்.
முதலில், யார் வேட்பாளர் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். அதைத்தான் முதலில் செய்யவேண்டும்.
அனைத்து வேட்பாளர்களுடனும் நாம் பேச்சு நடத்துவோம். தமிழ் மக்களின் தேசிய பிரச்னையை தீர்க்க, அதிகபட்ச தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக, யார் நம்பிக்கை அளிக்கிறார்களோ, அவர்களுக்கே எமது ஆதரவு. அதனால், அனைவருடனும் பேசிய பின்னரே நாம் தீர்மானம் எடுப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியல் தீர்வுக்காக புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டமை, அபிவிருத்தியில் கூட்டமைப்பை பங்காளியாக்கியது உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, அது எதிர்காலத்திலும் தொடரும் என குறிப்பிட்டார்.

அத்துடன், தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால், அடுத்த ஒரு வருட காலத்துள் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை நிறைவுசெய்து, இனப்பிரச்னையை தீர்ப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

கல்முனை விவகாரத்தில் வாக்களித்தபடி, பிரதமர் செயல்படவில்லை என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, பூர்வீகமாக குடியிருக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள் எனவும், இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் துணையாக இருக்கிறார் எனவும், தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்முனை விரைவில் தரமுயர்த்தப்படும் என, மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார்.

எல்லை மீள்நிர்ணய பணிகள் இடம்பெற்று வருவதாகவும், கல்முனையை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் இடம்பெறுவதாகவும், அது விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், பிரதமர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ