தேர்தலில் கோட்டாபயவுக்கு கட்டுப்பணம்

0 21

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை, ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காமினி லொக்குகே ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ஷவைத் தவிர இதுவரை 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தும் தினம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை இது கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று 3 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு சுயாதீன வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவரும், தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த கெட்டகொட, சிறிபால அமரசிங்க ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாகவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோட்டபாய ராஜபக்ஷ தரப்பினர் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ