ரணிலின் அதிகார துஷ்பிரயோகங்கள் – மைத்திரி குற்றச்சாட்டு

0 13

அரசியல் பலத்தை பயன்படுத்தி ரணில் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது தற்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடந்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற சுந்திர கட்சி சம்மேளன கூட்டத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் ஏன் என்னை ஜனாதிபதியாக நியமித்தனர்? நாட்டுக்கு ஜனநாயகம் தேவை என்றே அவர்கள் என்னை நியமித்தனர். ஊழல், வன்முறை ஆட்சி இருந்தபடியால், நான் ஜனநாயகத்தை நிலைநாட்டி வாழும் உரிமையை ஏற்படுத்தினேன்.

ஆனால், ரணில் தனி பயணம் ஒன்றை ஆரம்பித்தார். கடந்த அரசைவிட மோசமான ஊழல் செய்தார்.
மத்திய வங்கி ஊழல் அதில் ஒன்று.

மேலைத்தேய தேவைக்கேற்ப அவர் நாட்டை ஆட்சி செய்தார். மின்சார கதிரை, வெளிநாட்டு தலையீடு, இராணுவத்தினருக்கு தண்டனை என்ற கோஷங்களை நான் எனது ஆட்சியில் நிறுத்தினேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள், முப்படைகளின் பலத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகங்களை செய்தனர். மூன்று மாதங்கள் எனது பதவிக்காலம் முடியவிருக்கும் சூழ்நிலையில், இதுவரை நான் அப்படி எதனையும் செய்ததில்லை.

நாட்டுக்காக அரசியல் செய்வது யார்? தனக்காக அரசியல் செய்வது யார்? என்பது, இப்போது உங்களுக்கு தெரியும். இதனால்தான் நாட்டில் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுடன் இந்த ஜனாதிபதி தேர்தலை ஒப்பிட முடியாது.
நான் அரசின் ஊழல்களை பேசியபோது, அது எதிர்க்கட்சியின் வாக்குகள் கிடைக்க ஏதுவானது.
சுதந்திரக் கட்சியை குழிதோண்டி புதைத்துவிட முடியாது. பெட்டிக்குள் வைத்து ஆணியடிக்க முடியாது. நாம் ஒரு தூய்மையான கட்சி. அடுத்த தேர்தலில் யார் ஜனாதிபதியானாலும், அவரை அந்த இடத்துக்கு கொண்டுவருவதில் எமது கட்சியே முக்கிய பங்கைக்கொண்டிருக்கும்.

ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் குறித்து, பல மட்டங்களில் விசாரணைகள் நடக்கின்றன.
பாராளுமன்ற தெரிவுக்குழு என்னிடம் ஆலோசனைகள் கேட்டிருந்தது. நான் அதற்கு கடப்பாடு இல்லாத ஒருவர். அதனால், நான் விரும்பினால் அதனை செய்யலாம் என்று சட்ட மா அதிபர் கூறினார்.

ஆனால் நான் ஜனநாயகத்தை மேற்கொண்டேன். நான் அதனை செய்தி ஊடகங்களுக்கு வழங்க அநுமதி கேட்டேன். நாட்டுக்கு அதனைச் சொல்ல முயன்றேன். ஆனால், தெரிவுக்குழு அதனை அநுமதிக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை.

நான் அந்த தாக்குதல்கள் குறித்து உண்மைகளை கூறினேன். நான் செய்தி ஊடகங்களை அநுமதிக்க கோரினாலும், தெரிவுக்குழு அதனை அனுமதிக்கவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்ததாக, ரணில் ஆடைகளை அணிந்து கொண்டுதான் கூறுகிறாரா?ரவி கருணாநாயக்க எம். பி. என்னைத் தொடர்புகொண்டு, அமைச்சரவையைக் கூட்ட கோரினார்.
நான் அதனை பிரதமரே செய்யவேண்டுமென கூறினேன். பின்னர் நானே தொலைபேசியில் கேட்டபோது, அமைச்சரவையை கூட்டுமாறு பிரதமர் கோரினார்.

அமைச்சரவை பத்திரத்தை அவசரஅவசரமாக தயாரித்து, பின்னர் அதனை அமைச்சரவைக்கு வழங்க வேண்டாமென, அமைச்சரவை செயலாளரிடம் அவர் சொல்வதையும் நான் இரகசியமாக கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

இதெல்லாம் செய்துவிட்டு, நான் இதனை ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். பின்னர், அமைச்சரவையில் அவர் பேச ஆரம்பித்ததும், அவரது அமைச்சர்களே எதிராக பேச ஆரம்பித்தனர்.
இது கட்சிப் பிரச்னை என்று கூறி, நான் அவர்களை அனுப்பிவைத்தேன். இப்போது நான் அமைச்சரவையைக் கூட்டியதாக கூறுகிறார்.

அமைச்சரவையை கூட்டி, பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றி, சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை நான் அறிவிக்க வேண்டும். சர்வசன வாக்கெடுப்பு நடத்தியும் அதனை செய்யலாமா என்பதனைப் பார்க்கவேண்டும். ஆனால், நான் கொள்கையளவில் இந்த நிறைவேற்று அதிகார பதவி நீக்கத்தை ஆதரிக்கிறேன்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் டில்ருக்ஷி பேசிய உரையாடல் ஒன்று இப்போது உலவுகிறது. அவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி, பிரதமர் சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு கடிதம் அனுப்பினார். ஆணையாளர் டில்ருக்ஷி காலையில் தனது அலுவலகத்திலும், மாலையில் அலரி மாளிகையிலும் இருந்தார். அது எனக்கு தெரியும்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி இப்போதாவது அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியவர்களை வெளிப்படுத்தவேண்டும். அதுதான் நாட்டுக்கும் நல்லது. அரசியல் பலத்தை பயன்படுத்தி, ரணில் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது.
இந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடந்துள்ளது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ