அரசு ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலிக்கவேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை

0 8

நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவை, கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் அலுவலகத்தில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்களுக்கும் தமிழர் மரபுரிமை பேரவை மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதே தமிழர் மரபுரிமை பேரவையால் ஐந்து அம்ச கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்று தமிழரசு கட்சி உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில்,நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும்.

இவ்வாலயத்தைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து, பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்த காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்கவேண்டும்,

வடமாகாணத்தில் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்ட தொல்லியல் பிரதேசங்கள், நம்பகத் தன்மையான தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், யாழ்ப்பாண பல்கலைகழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிர்வாக மற்றும் கிராம மட்ட மக்களின் பங்ஙகளிப்புக்களுடன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு ஊறுதிப்பாடு செய்யப்படும்வரை, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களைவிட மாற்றங்கள் திரிபு படுத்தல்கள் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாது பேணப்படவேண்டும் என்பதை வலியுறத்தி அரசாணை ஒன்றினை உடன் வெளியிட குறித்த அமைச்சிடம் இருந்து எழுத்துமூலமான வாக்குறுதி பெறப்பட வேண்டும்,

வடமாகாணத்தில் மகாவலி ‘எல்’ அபிவிருத்தி வலயம்மூலம் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களமயமாக்கல் தற்போதும் தொடர்ந்து இடம்பெறுவதால், குறைந்தபட்சம் 2007ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதுடன், 1988ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்
எல்லைக் கிராம தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும்.

எதிர்வரும் நாட்களில் மகாவலி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு, மாகாண திணைக்களங்களூடாக மேற்கொள்ளப்படவேண்டும்.

‘ஜீபீஎஸ்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2009இன் பின்னர் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்ட ஒதுக்கப்பட்ட காடுகள் தொடர்பான எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படவேண்டும்.

வனஜீவராசிகள் திணைக்களத்தால் 2009ஆம் ஆண்டு வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட தேசிய பூங்கா மற்றும் இயற்கை இடங்கள் மக்களின் குடியிருப்பு, வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையதாகையால், இவற்றுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும்.

அத்துடன், மக்கள் குடியிருப்புக்கள் கலாசாரம், வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படா வண்ணம் அரசாணை ஒன்று உடன் வெளியிடப்படவேண்டும்

இந்த கோரிக்ககைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இக்கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் தமிழர் மரபுரிமைப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ