ஜனாதிபதி வேட்பாளராக ஐ. தே. க. மாநாட்டில் சஜித் பிரகடனம்

0 10

ஜக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது மாநாட்டில், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜக்கிய தேசிய கட்சியின் 77ஆவது மாநாடு, பெருமளவான ஆதரவாளர்கள் மத்தியில் கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது. இதன்போது 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை கட்சியின் பங்காளிக் கட்சிகளும், ஜக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஜக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு/ கடந்த ஒக்டோபர் 26க்கு பின்னரான அரசியல் குழப்பத்தின்போது நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறை சீர்திருத்தம் என்பவற்றை செய்வதற்கான பணிகள் தொடரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும், அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானோருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில், ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் துணைவியார் ஹேமா பிரேமதாச, அமைச்சர் சஜித் பிரேமதாச, கல்வியமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின் செயலாளமான அகிலவிராஜ் காரியவாசம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீன் உள்பட ஜ. தே. கட்சியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கௌரவமளித்ததோடு, அவர் முன்னிலையில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கும் அறிவிப்பினையும் விடுத்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பம் முதல் தற்போதைய செயல்பாடுகள் வரையிலான ஆவணப் படமும் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை நிபந்தனைகளற்று ஆதரிப்பதற்கு ஸ்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

நேற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில், சஜித் பிரேமதாசவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறித்த முடிவினை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்த கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்து வருகின்றன.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தமது ஆதரவை நேற்றைய தினம் சஜித் பிரேமதாசவுக்குத் தெரிவித்திருந்த நிலையில், முஸ்லிம் காஸ்கிரஸ் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ