கோட்டாபய பிரஜாவுரிமை: ‘ரிட்’ மனு தள்ளுபடி

0 15

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை, ஆட்சேபணைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த அறிவிப்பு வெளியானது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குள்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கை தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பவற்றை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்டது சட்டவிரோதமானது என்றும், இவை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளவரை, கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கை குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என, உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இன்றுடன் மூன்று நாள்களாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த இந்த வழக்கை, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சிக்கல் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை, ஆட்சேபணைக்கு உள்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமையையடுத்து, அரசியல் பிரமுகர்கள், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு வெளியிடப்பட்டதைடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசியல் பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும், கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.
கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரமுகர்கள், தேர்தல் பணிகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை, இலங்கை பிரஜையாக ஏற்க வேண்டாம் எனக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தொடர்பு இல்லை என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்க எதிரான மனுவுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் தொடர்பு இல்லை எனவும், சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை சிதறடிப்பற்காக, ஐக்கிய தேசிய கட்சி, சில்லறைத்தனமான செயற்பாட்டில் ஈடுபடமாட்டாது எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ