ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நாளை தாக்கல்

0 6

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை இடம்பெறவுள்ளது.

காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 41பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை மூன்று மாதங்களுக்குள் வெளியிடவேண்டும் எனவும், ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் வேட்பாளர் பதவி ஏற்பதற்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான வெளியீட்டை மேற்கொள்ளவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்திற்குள் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படுவதுடன், குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிவரை இராஜகிரிய சரண மாவத்தை மூடப்படுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இலங்கை விமானப்படை தேர்தல் அலுவலகப்பகுதியில் விமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

இராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் விசேட அதிரடைப்படை அடங்கலாக ஆயிரத்து 700 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்டார்.
.
மிரிஹென பகுதியில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில், தேரர்களிடம் ஆசி பெற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, சகோதரர்களான எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரான சமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு படிவத்தில் கையொப்பமிட்டார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ