நீதியற்ற, ஒரு குழப்பம்

0 266

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் சுமார் மூன்றரை லட்சம் வாhக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளராக ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளைப்பெற்று இலங்கையின் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்த முன்னாள் நீதியரசர் சி. வி. விக்கினேஸ்வரன், பதவியேற்ற இரண்முடு மாதங்களுள் மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கை இழந்து, மற்றொரு `கொழும்புத் தமிழர்’ என்ற சந்தேகத்துடன் யாழ்ப்பாணத்தில் பார்க்கப்பட்டார்.
அப்போது, இப்படி `ஷீரோ’ வாக இருந்தவர், இப்போது, இரண்டு மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் பெரும் `ஹீரோ’வாக தெரிந்தார்.
புலம்பெயர் நாடுகளிலும் இதே நிலைமை இக் காலங்களில் ஒருசில மட்டங்களில் இதேமாதிரியே இருந்தது. ஆனாலும், காரணங்களிலும், நோக்கங்களிலும், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பிலும் இதனை முழுமையாக ஒப்பிட்டுவிட முடியாது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் பேராதரவுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், வட மாகாண சபையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்த ஆட்சி மாற்றத்தின் புதிய ஆட்சிக்கு ஒரு `சவால்போல’ நிறைவேற்றிய இன அழிப்பு தீர்மானம் இந்த `ஹீரோ’ மாற்றத்தை அவருக்கு அளித்தது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அத் தேர்தல், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் முதலமைச்சரின் செல்வாக்கு தொடர்பிலான ஒப்பிடவியலா நிலையைத் துல்லியமாக்கும். முதலமைச்சருக்கு புலம்பெயர் நாடுகளில் இப்போது பேராதரவாகவிருப்பவர்கள் பலர் இலங்கையில் வாழும் தமிழ் மக்களைப்போல, அந்த ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளித்தவர்கள் அல்லர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சியில் தொடரவேண்டும் என்று அவாவியவர்கள் அவர்கள்.
புரிந்துகொள்ளச் சற்றுப் புதிரான இந்த ஒற்றுமை-வேற்றுமையில், முக்கியமான ஒரு பாராளுமன்ற தேர்தல் வேளையில், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நீதியற்ற, ஒரு குழப்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

– விஸ்வாமித்திரன்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ