இலங்கைப் பொருளாதாரத்தில் மெய்யான மாற்றம் ஏதும் இல்லை! – இந்திரஜித் குமாரசாமி

0 255

இலங்கைப் பொருளாதாரத்தில் மெய்யான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என பொருளியலாளரும், மத்திய வங்கியின் முன்னால் பணிப்பாளருமான இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி அதிகரித்து இதனால் வேலை வாய்ப்புக்கள் கூடி, வருமானம் அதிகரித்து வறுமை குறைவடைதல் என்ற பொதுவான பொருளாதார பண்பினை இலங்கையில் காண முடியாதுள்ளது.
தற்போது மிகத் தாழ்ந்த மட்டத்தில் காணப்படும் வேலையின்மை மற்றும் வறுமையின் சதவீதங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மெய்யான மாற்றங்களால் உண்டானவை அல்ல.
புலம்பெயர்ந்து வாழுகின்ற அல்லது உழைப்பாளிகள் அனுப்பும் பணத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு, என்றும் இல்லாதவாறு அரச துறையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற விரிவாக்கம் மற்றும் இராணுவக் குடும்பங்கள் பெற்றுக்கொண்ட அரச நிதி கொடுப்பனவுகள் மற்றும் உதவிகள் போன்றனவற்றாலேயே வறிய குடும்பங்களின் சதவீதம் குறைவடைந்துள்ளது.
இதேபோல வேலையின்மை வீதத்தினை நோக்கும் போது, அரச துறையில் பணியாற்ற பெருமளவானோர்
உள்வாங்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க அளவிலான தொழிலாளர்கள் வேலை தேடி வெளி நாடு சென்றதினாலேயே கடந்த ஆண்டு (2012) இலங்கையின் வேலையின்மை 4% ஆக வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்திரஜித் குமாரசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 2006 – 2012 (மகிந்த ஆட்சி) காலத்தில் இரு மடங்கிற்கும் மேலாக (சுமார் 3 மில்லியன்) உயர்ந்து நிற்பதனை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

 

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ