லொறியினுள் 70 சடலங்கள்

0 26

ஒஸ்ரிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட லொறியொன்றினுள் 70க்கு மேற்பட்ட சடலங்களை ஒஸ்ரிய பொலீசார் கண்டெடுத்துள்ளனர். ஹங்கேரியன் எல்லைப் பகுதியில், வியன்னா நோக்கிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த இந்த லொறியில் பயணம்செய்த இவர்கள், வெளிநாடுகளில் புகலிடந்தேடிப் புறப்பட்டவர்களாகவிருக்கலாமென்று பொலீசார் நம்புகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே இவர்கள் இறந்திருக்கலாமென்று நம்பும் பொலீசார், ஹங்கேரி எல்லையைக் கடந்து, லொறி ஒஸ்ரியாவுக்குள் பிரவேசிக்குமுன்னரேயே இவர்கள் இறந்திருக்கலாமென்றும் தெரிவிக்கின்றனர்.

ஹங்கேரிய இலக்கத் தகட்டுடன், சொலொவாக்கிய கோழி இறைச்சி நிறுவனமொன்றின் பெயர் இலச்சினையைக்கொண்ட இந்த லொறி தற்போது தமக்கு சொந்தமானதல்ல என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, லிபியா அருகே நேற்று சுமார் 500 பேருடன் பயணித்த இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாமென்று லிபிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் சுமார் 200 பேர்வரை காப்பாற்றப்பட்டிருப்தாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தில் இதுவரை சுமார் இரண்டாயிரத்து 400 பேர் ஐரோப்பிய நாடுகளை நோக்கிய படகுகள் பயணத்தில் மத்திய தரைக்கடலில் உயிரிழந்திருப்பதாக ஐ. நா. தெரிவித்திருக்கிறது.

கலவரங்களுக்குள்ளான மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து அண்மைக் காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர முல்கின்றனர். கடந்த மாதம், சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ